×

செட்டியார்பட்டி பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பு: அகற்ற மக்கள் கோரிக்கை

ராஜபாளையம: விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலியில் வடக்கு தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அந்த பகுதியில் ஒரு பக்க வாறுகால் மட்டுமே கட்டபட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது.இதனால், இப்பகுதியில் கொசுக்களின் உற்பத்திய அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, மலேரியா, டெங்கு முதலான நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் வாறுகால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கழிவுநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் தேக்கத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post செட்டியார்பட்டி பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பு: அகற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chettiarpatti Municipality ,Rajapalayam ,Virudhunagar district ,Chettiarpatti ,
× RELATED போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்