×

கேரள மாநிலம் பாலக்காட்டில் பைக்கில் பின்சீட்டில் ஆண்கள் அமர தடை

திருவனந்தபுரம்: பாப்புலர் பிரண்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட பாலக்காட்டில் பைக்கில் பின்சீட்டில் ஆண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டில் அடுத்தடுத்த நாட்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த சுபைர் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் னிவாசன் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சுபைர் கொலையில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் 2 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த விவரங்களை விரைவில் போலீசார் வெளியிட உள்ளனர். ஸ்ரீனிவாசன் கொலையாளிகள் வந்த ஒரு பைக் குறித்த விவரங்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. இதற்கிடையே இன்று மாலை பாலக்காட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள மின்வாரிய துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக, எஸ்டிபிஐ உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.இதற்கிடையே பாலக்காட்டில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள வரும் 20ம் தேதி வரை இருசக்கர வாகனங்களில் ஆண்கள் பின் சீட்டில் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஸ்ரீனிவாசனின் கொலையாளிகள் பைக்குகளை பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

The post கேரள மாநிலம் பாலக்காட்டில் பைக்கில் பின்சீட்டில் ஆண்கள் அமர தடை appeared first on Dinakaran.

Tags : Kerala State ,Palakkad ,Thiruvananthapuram ,Popular Front ,RSS ,Kerala ,State ,Palakad ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...