×

அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடக்கம் 25 நாட்கள் கத்தரி வெயில் வாட்டி வதைக்கும்

நெல்லை:  அக்னி நட்சத்திரம் வருகிற மே 4ல் தொடங்குகிறது. தொடர்ந்து 25  நாட்கள் கத்தரி வெயில் தாக்கம் நீடிக்கும். தமிழகத்தில்  கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த வாரத்தில்  பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்த நிலையில், நேற்று முன்தினமும்,  நேற்றும் வெயில் மீண்டும் வாட்டத் துவங்கியுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 103 டிகிரியை  கடந்து வெப்பம் பதிவானது. நெல்லை மாவட்டத்திலும் 100 டிகிரியை  வெயில் எட்டியது. மீண்டும் சுட்டெரிக்க துவங்கியுள்ள கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல், மூணார் என மலைப்பகுதிகளுக்கு படையெடுக்க  துவங்கியுள்ளனர். ஏசி, மின்விசிறி, ஏர்கூலர், டவர் பேன், பிரிட்ஜ்  உள்ளிட்டவைகளின் விற்பனையும் சக்கைபோடு போடுகிறது. குளிர்பானங்கள்  விற்பனையும் களை கட்டியுள்ளது. சாலையோராங்களில் நுங்கு, பதநீர், நீர்மோர்  உள்ளிட்ட குளிர்பான விற்பனை தற்காலிக கடைகள் அதிகம் தோன்றியுள்ளன. பழங்கள்  விற்பனையும் ஜோராக நடக்கிறது.அதிகாலை 5.45 மணிக்கே சூரியன் தோன்றி இரவு 7 மணிவரை பகல் பொழுது நீடிக்கிறது.  எனவே வயதானவர்கள், ரத்த அழுத்த குறைபாடு உடையவர்கள் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை சாலைகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனிடையே  கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற மே  4ம் தேதி  தொடங்க உள்ளது. இது மே  28ம் தேதிவரை 25  நாட்கள் நீடிக்கிறது. இந்த நாட்களில்  வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது….

The post அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடக்கம் 25 நாட்கள் கத்தரி வெயில் வாட்டி வதைக்கும் appeared first on Dinakaran.

Tags : Qatari ,Tamil Nadu ,Agni Star ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...