×

கடையம் அருகே சாலையில் இறந்து கிடந்த மரநாய் மீட்பு

கடையம்:  கடையம் அருகே சாலையில் இறந்து கிடந்த மரநாய் மீட்கப்பட்டது. கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றன. இந்நிலையில் திருமலையப்பபுரம் விலக்கு பகுதியில் இருந்து கேளையாபிள்ளையூர் செல்லும் வழியில் நேற்று காலை மரநாய்  இறந்து கிடந்தது. நடைபயிற்சி மேற்கொண்ட போது இதை கண்ட மக்கள், கடையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கடையம் வனச்சரக பொறுப்பு உதவி வனப்பாதுகாவலர் ராதை உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் பெனாசிர் தலைமையில் விரைந்து வந்த வேட்டை தடுப்பு காவலர்கள்,  மரநாயை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளில் புகுந்த மரநாய்கள் மீட்கப்பட்டன. இதனிடையே இறந்தது 3 வயதுடைய ஆண் மர நாய் என்பது வனத்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அது எப்படி இறந்ததது என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post கடையம் அருகே சாலையில் இறந்து கிடந்த மரநாய் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Khadayam ,Western Ghats ,Dinakaran ,
× RELATED தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற...