×

போக்சோ வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி பற்றிய அடையாளம் வெளிவரக்கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி(70). இவர், 2வது படிக்கும் 7 வயது சிறுமியை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வழக்கில், புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் கடந்த 2019ல் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அஷ்ரப் அலி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது 10 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்படுகிறது. வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளப்படுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், கீழமை நீதிமன்றத்தின் விசாரணையில் சில இடங்களில் சிறுமியை அடையாளம் காணும் வகையில் உள்ளது. எனவே, ேபாக்சோ வழக்கு விசாரணையின்போதும், வழக்கு ஆவணங்களிலும் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காணாத வகையில் இருக்க வேண்டும் என்பதை விசாரணை நீதிமன்றங்கள் எதிர்காலத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்….

The post போக்சோ வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி பற்றிய அடையாளம் வெளிவரக்கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : POCSO ,ECtHR ,Madurai ,Ashraf Ali ,Pudukottai district ,
× RELATED போக்சோ, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு