×

கொடநாடு வழக்கில் மாஜி எம்எல்ஏ ஆறுக்குட்டி மகன், தம்பி மகன் உதவியாளரிடம் விசாரணை

கோவை: கொடநாடு வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டியின் மகன், தம்பி மகன் மற்றும் உதவியாளரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரியில் உள்ள ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த டிரைவர் கனகராஜ் என்பவர் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடமும் கார் டிரைவராக பணியாற்றியதாக தகவல் வெளியானது. ஆறுக்குட்டி முக்கிய இடங்களுக்கு கனகராஜூடன் காரில் சென்று வந்துள்ளதாக தெரிகிறது. அவரிடம் கனகராஜ் 16 மாதம் டிரைவாக வேலை செய்துள்ளார். கனகராஜ் இறப்பதற்கு சில மாதம் முன்பு ஆறுக்குட்டியிடம் வேலை செய்யாமல் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடநாடு வழக்கை விசாரித்து வரும் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் ஆறுக்குட்டியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.ஆறுக்குட்டியின் மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் போலீசார் நேற்று 4 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். அப்போது கனகராஜூக்கு நெருக்கமான நபர்கள், அவரை தேடி வரும் நபர்கள், நெருங்கிய தொடர்பில் உள்ள நபர்கள், அரசியல் பிரமுகர்கள், கொடநாடு வழக்கில் கைதானவர்களுக்கும், கனகராஜூக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் கேட்டதாக தெரிகிறது. மேலும் கொடநாடு பங்களா விவகாரம் தொடர்பாக கனகராஜ் இதற்கு முன் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?, அங்கே நடந்த விவரங்கள் ஏதாவது உங்களிடம் பகிர்ந்தாரா? என போலீஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டது. 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ‘‘தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை நடத்தப்படும். அப்போது ஆஜராகி பதில் தரவேண்டும்’’  என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆறுக்குட்டி நேற்று கூறுகையில், ‘‘என்னிடம் கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கனகராஜ் தொடர்பாக நேற்று முன்தினம்தான் முதன்முதலில் விசாரித்தார்கள். என் மடியில் எந்த கனமும் இல்லை. எனக்கு எந்த பயமும் இல்லை. கனகராஜ் என்னிடம் டிரைவராக வேலை செய்தார். இதில் மறைக்கவேண்டிய தகவல் எதுவுமில்லை’’ என்றார்….

The post கொடநாடு வழக்கில் மாஜி எம்எல்ஏ ஆறுக்குட்டி மகன், தம்பி மகன் உதவியாளரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : kondanadu ,maji MLA ,Kodanadu ,AICC MLA ,Maji ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...