×

நோய் தீர்க்கும் பணியாளர்களுக்கே இந்த நிலமை குப்பைகளால் சூழ்ந்திருக்கும் சுகாதார பணியாளர்களின் குடியிருப்பு

தங்கவயல்: தங்கவயலில் அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள், மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு சுற்றிலும் குப்பை கூளங்கள் நிறைந்து சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் அவல நிலையில் உள்ளது.  தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. மருத்துவமனையை அடுத்து மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் வார்டு பணியாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியியிருப்பு சுற்றிலும் சுற்றுச்சுவர் உள்ளது. முறையான துப்புரவு பராமரிப்பு இல்லாததால் இந்த குடியிருப்பு வளாகத்தில் புதர் செடிகள் வளர்ந்து கிடக்கிறது.குறிப்பாக குடியிருப்பு வளாகத்திற்குள் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம். குடியிருப்பின்பின்புறம் சஞ்சய் காந்தி நகரும், முன்புறம் ராபர்ட்சன்பேட்டை ஆண்டர்சன் பேட்டை நேதாஜி சாலையும் உள்ளது. குடியிருப்பின் சுற்றுச்சுவர் உள்ளுர் வளாகத்தில் மட்டுமின்றி வெளிபுறம் உள்ள சாலை கால்வாய்களிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. நோய் தீர்க்கும் சுகாதார பணியாளர்களின் குடியிருப்பிலேயே நோய் பரவும் சூழல் உள்ளதை நகரசபை கண்டு கொள்ளவில்லை. மேலும் இந்த குப்பைகள் அனைத்தும் சுற்றிலும் வசிக்கின்றவர்களின் வீட்டு கழிவுகளே ஆகும். இது குறித்து நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது….

The post நோய் தீர்க்கும் பணியாளர்களுக்கே இந்த நிலமை குப்பைகளால் சூழ்ந்திருக்கும் சுகாதார பணியாளர்களின் குடியிருப்பு appeared first on Dinakaran.

Tags : Thangavyal ,
× RELATED பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5...