×

தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை: மைசூரு கலெக்டர் தகவல்

மைசூரு: இந்தியாவில் பல பரிசோதனைகள் செய்து தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தெரிவித்தார். மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி வாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். பின்னர் சுமார் 30 நிமிடம் தனி அறையில் அமர்ந்து ஓய்வு எடுத்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்றார்.பின்னர் மாவட்ட கலெக்டர் செய்தியாளர் களிடம் கூறுகையில், “இந்தியாவில் பலகட்ட சோதனைகளுக்கு பிறகு புழக்கத்திற்கு வந்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்தால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த தடுப்பூசியை நானே போட்டுக்கொண்டேன். எனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோவிட் -19 தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வரவேண்டும். இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். கோவிட்-19 முதற்கட்ட தடுப்பூசி முகாமில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் கொரோனா வாரியர்ஸ்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ரோகிணி சிந்தூரி தெரிவித்தார்….

The post தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை: மைசூரு கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mysore Collector ,Mysuru ,India ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...