×

2 ஆண்டுங்களுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு: மாவட்ட நிர்வாகம் உதவி எண் அறிவிப்பு

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் வைகை கரையில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டனர்.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக  கோயிலின் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி விழா நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதால் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன் தினம் காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான நேற்று மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும் மற்றும் மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். இந்நிலையில் சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது.கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் வைகை கரையில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டனர். இந்த கூட நெரிசலில் சிக்கி ஆண் ஒருவர், பெண் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து மதுரையில் வைகையாற்றில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 2 பேர் இறந்த நிலையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 9498042434 என்ற எண்ணில் விவரங்களை அறியலாம் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்….

The post 2 ஆண்டுங்களுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு: மாவட்ட நிர்வாகம் உதவி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Sitra festival ,Vaigayadu ,Madurai Sitrishi festival ,Madurai Shithra festival ,District Administration ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்றி வைகையாற்றின்...