×

ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மல்லி, சாமந்தி விலை உயர்வு

அண்ணாநகர்: நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகை, சாமந்தி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நிலக்கோட்டை மற்றும் திருச்சி பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 30 முதல் 40 லாரிகளில் பூக்கள் வந்தன. இதன்காரணமாக நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு மல்லிகைப் பூ 300க்கு விற்பனையானது. பன்னீர் ரோஸ் 100, சம்பங்கி 160 ரூபாய், சாக்லெட் ரோஸ் 180, அரளி பூ 300, கனகாம்பரம் 500 முதல் 600, சாமந்தி 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி 120ல் இருந்து 200க்கும் விற்பனையானது. பன்னீர் ரோஸ் 100ல் இருந்து 60 முதல் 80 வரை விற்பனையாகிறது. அரளி பூ 300ல் இருந்து 200க்கும் கனகாம்பரம் 500ல் இருந்து 400க்கும் சாக்லெட் ரோஸ் 180 ல் இருந்து 140க்கும் என விற்பனை செய்யப்பட்டன. இதுபற்றி கோயம்பேடு பூ மார்க்கெட் பொருளாளர் பெருமாள் கூறுகையில், ‘’நாளை  ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு மல்லி, சாமந்தி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலை நேற்று விற்பனை செய்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் பூக்களின் விலை குறையும்’ என்றார்….

The post ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மல்லி, சாமந்தி விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbedu Flower Market ,Easter ,Annanagar ,Coimbed market ,Chennai ,Daisy ,Coyambedu Flower Market ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது