×

மகாவீர் ஜெயந்தியில் திறந்திருந்த இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

பூந்தமல்லி: திருவேற்காட்டில் மகவீர் ஜெயந்தியான நேற்று இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மகாவீர் ஜெயந்தியையொட்டி, மதுபானக்கடைகள், இறைச்சிக்கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கூடத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வெட்டுவதற்கும், இறைச்சி கடைகளை திறந்து விற்பனை செய்வதற்கும் நேற்று ஒருநாள் மட்டும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதை மீறி இறைச்சி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் தடையை மீறி திருவேற்காட்டில் சில இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டு இறைச்சி விற்பனை நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் சுகாதார துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது….

The post மகாவீர் ஜெயந்தியில் திறந்திருந்த இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Mahavir ,Jayanthi ,Poondamalli ,Mahavir Jayanthya ,Thiruvellutad ,Mahaveer Jayanthiyothi ,Mahavir Jayanthi ,
× RELATED சென்னையில் மது விற்பனை செய்தவரிடம் பணம் பறிப்பு: காவலர்களிடம் விசாரணை