×

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மேகி புயல் : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 138 ஆக உயர்வு

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மேகி புயலை தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் மேகி என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது.கன மழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்  எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளனர்.காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் கடலோர காவல்படை, காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் ராணுவமும் இணைந்துள்ளது. மண்சரிவுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. …

The post பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மேகி புயல் : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 138 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Maggie storm ,Philippines ,Manila ,Magi storm ,Maggie ,Dinakaran ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!