×

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஸ்டிரைக்

ஈரோடு: ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். 4 ஆயிரம் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ரூ.30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் ஜவுளிகளை உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல், நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், காட்டனை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வரக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், அதனை சார்ந்த 4 ஆயிரம் ஜவுளி கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. இதில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதி, திருவெங்கடசாமி வீதி, பெருமாள் கோயில் வீதிகளில் செயல்படும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதுபற்றி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைசெல்வன் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில், பஞ்சு விலை ஒரு கண்டி எனப்படும் 356 கிலோ, ரூ.43 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது. பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த பல்வேறு ஜவுளி சார்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இறக்குமதி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய நெருக்கடியாகவும், தொழில் அழியும் அபாயத்துக்கும் கொண்டு செல்கிறது. இத்தொழிலை காப்பாற்றும் நோக்கத்தில், பஞ்சு, நூல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் காட்டன் நூலை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வந்து நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த ஜவுளி கடைகளும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இப்போராட்டத்தின் காரணமாக ரூ.30 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது….

The post நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா