×

கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம்

 

சென்னை: தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டு விட்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். அவருக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும், விக்னேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். கார்த்திகா 2011ல் வெளிவந்த ‘கோ’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் ‘அன்னக்கொடி’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படங்களில் நடித்தார். முதல் படம் பெரிய வெற்றியை பெற்ற பின்னும் அடுத்த படங்கள் ஓடாததால் அவரால் திரையுலகில் நீடிக்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் ராதாவின் இரண்டாவது மகள் துளசி அறிமுகமானார். அதன்பின் அவர் ‘யான்’ என்ற படத்தில் நடித்தார். அவருக்கும் பட வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் கார்த்திகா அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கை விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பளிச்சென தெரியும்படி பதிவிட்டுள்ளார். கார்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறித்துதான் அவர் சூசகமாக புகைப்படம் வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். விரைவில் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

The post கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kartika ,Chennai ,Radha ,Karthika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல்...