×

நூல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்: அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று, தமிழகத்தில் நூல் விலை உயர்வு குறித்து தங்கமணி (அதிமுக), பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக) உள்ளிட்ட கட்சி சார்பில் சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். ‘‘விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறை ஜவுளித்துறை. நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித்துறை முடங்கி, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நூல் விலை 100 ரூபாயில் இருந்து 165 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜவுளி துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க முன்வராததால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர். இதற்கு பதிலளித்து பேசிய கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் காந்தி பேசியதாவது: செஸ் வரி ரத்து செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். தமிழகத்தில் சமீபத்தில் இறக்குமதி வரி 11 சதவீதமாக உயர்ந்துள்ளதாலும், பருத்தி பதுக்கல் போன்ற காரணங்களில் தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், ஒன்றிய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: நூல் விலை ஏற்றம் காரணமாக தமிழகத்தின் ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலை உயர்வை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது….

The post நூல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்: அமைச்சர் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister ,Gandhi ,Chennai ,Legislative Assembly ,Thangamani ,AIADMK ,Prince ,Congress ,G.K.Mani ,BAMAK ,Velmurugan ,Tamil Nadu ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...