×

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை:  தமிழக  சட்டப் பேரவையில் நேற்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக்  கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  பேசியதாவது: பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையாலும், இலங்கை மீனவர்களாலும் தொடர்ந்து  அச்சுறுத்தலுக்கு  உள்ளாக்கப்படுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த ஆட்சி காலத்தில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 125  தமிழக மீன்பிடி படகுகளுக்கு ரூ.6 கோடியே 61 லட்சம் நிவாரணமாக வழங்க  முதல்வர் ஆணையிட்டார். அந்த நிதி உடனடியாக மீனவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 44 கடற்கரை கிராமங்களில் ரூ.743 கோடி  செலவில் மீன்பிடி இறங்கு தளங்கள், தூண்டில் வளைவுகள், நேர்கல் சுவர்  அமைத்தல் மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் வேறு எங்கெல்லாம்  தேவைப்படுகிறதோ அங்கு ஆய்வு செய்து அந்த வசதிகளை ஏற்படுத்த முதல்வர்  அறிவுறுத்தியுள்ளார்.  இறால் வளர்ப்புக்கு உரிமம் பெறும் முறைகள்  மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. கடல் பொருள் ஏற்றுமதியாளர்களை  ஊக்கப்படுத்தும் விதமாக மீன் பதனிடும் நிலையங்கள் அமைப்பதற்கான உரிமங்களை  ஒற்றை சாளர முறையில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீன்பிடி துறைமுகங்களில் மீன் பதனிடுதல் மற்றும் ஏற்றுமதிக்கு தேவையான  கட்டமைப்புகளை அமைத்திட நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். மீன் குஞ்சு  உற்பத்தியில் தனியார் மீன் வளர்ப்போரை அதிக அளவில் ஈடுபடுத்திட உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் தமிழ்நாட்டின்  உள்நாட்டு மீன் உற்பத்தி பல உயரங்களை தொடும். வண்ணமீன் உற்பத்தி மற்றும்  விற்பனை மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக விளங்கி வருகிறது. சென்னையில்  முதல்வர் தொகுதி தான் தமிழ்நாட்டின் வண்ண மீன் உற்பத்திக்கே மையமாக  விளங்குகிறது. வண்ண மீன் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின்  கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் எந்த ஒரு விஷயத்திலும் பாரபட்சமின்றி உரிய தொடர் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய ஏதுவாக கச்சத் தீவை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசை முதல்வர்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.மீனவ மாணவர்களுக்கு இடஒதுக்கீடு 20 சதவீதமாக உயர்வுதமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மீன்வள இளங்கலை பட்டப்படிப்பில் 5 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக அதிகப்படுத்தி மொத்தம் 20 சதவீதமாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு தற்போது ரூ.30  கோடியே 45 லட்சம் செலவில் புதிய கட்டமைப்புகள் மற்றும் திட்டப் பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொளத்தூரில் வண்ணமீன் வர்த்தக மையம்கொளத்தூர் பகுதியில் சர்வதேச தரத்தில்  ஒரு வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வர்த்தகர்களின் விருப்பத்திற்கேற்ப இடமும் தேர்வு செய்து வண்ண மீன் வர்த்தக  மையத்தை கட்டமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது….

The post கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kachchathiwa ,Minister ,Anitha R. Radhakrishnan ,Chennai ,Fisheries and Fishermen's Welfare Department ,Legislative Assembly ,Tamil ,Nadu ,
× RELATED நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி...