×

தேவி ஸ்ரீபவானி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி குமணன்சாவடி குன்றத்தூரில் உள்ள தேவி ஸ்ரீபவானி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கோயில் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5ம் தேதி விநாயகர் பூஜை, கிராம தேவதை வழிபாட்டுடன் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று 4ம் கால யாக பூஜை, வேள்வி, பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து யாக சாலையிலிருந்து ஊர்வலமாக கலசங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் கோயில் நிறுவனர் பூவை ஞானம், நிர்மலா ஞானம் ஆகியோர் முன்னிலையில் மாங்காடு ரவி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தேவி ஸ்ரீபவானி அம்மன், நாகாத்தம்மன், துர்கை மற்றும் பரிவார தேவதைகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து  அம்மனை தரிசனம் செய்தனர்….

The post தேவி ஸ்ரீபவானி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Devi Sribavani Amman Temple ,Kumbaphishekam ,Poonthamalli ,Sribhavani ,Amman Temple ,Poonthamalli Gumanzavadi Kuntathur ,Devi Sribhavani Amman Temple Kumbhakshetam ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...