×

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் மீது பிரிட்டனில் எழுந்த விமர்சனத்தால் ரஷ்யாவில் நிறுவனத்தை மூட நடவடிக்கை

லண்டன்: உலகின் முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளதாகவும், அங்கு அணிந்து வணிக நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக்கொண்டுள்ளன. இந்நிலையில்  முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ரஷ்யா அலுவலகத்தை மூட முடிவு செய்திருக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனர்  நாராயணமூர்த்தியின் மகள் அக்க்ஷிதா, பிரிட்டன் நிதியமைச்சரான  ரிஷிசுனாக்கை மணம் முடித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளில் சுமார் 400 மில்லியன் பவுண்ட் அக்க்ஷிதாவிற்கு உள்ளது. இதனால் ரஷ்யாவில் இருந்து ஆதாயம் பெற்று வருவதாக ரிஷிசுனாக் மீது பிரிட்டனில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் ரஷ்யாவில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.       …

The post இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் மீது பிரிட்டனில் எழுந்த விமர்சனத்தால் ரஷ்யாவில் நிறுவனத்தை மூட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Russia ,UK ,Infosys ,Narayanamurthy ,London ,Infocus ,Narayanamoorthi ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...