×

திருத்தணி முருகன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற 1008 குடம் பாலபிஷேகம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு முன்னிட்டு 1008 குடம் பாலபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு இந்த பால்குட அபிஷேகம் வழக்கத்தை போல் நந்தி ஆத்தங்கரை ஓரத்தில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. முன்னதாக கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி சிறப்பு பூஜைகள் நடத்தி இந்த பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.திருத்தணி முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு சரவண பொய்கை திருக்குளம் மற்றும் படிக்கட்டுகள் மீது நடந்து சென்று மலைக்கோயில் அடைந்த பால்குட ஊர்வலம் காவடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள உற்சவர் கடவுள் வள்ளி தெய்வயானை சமேதராய் வீற்றிருந்த முருகனுக்கு பால் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடத்தி தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்….

The post திருத்தணி முருகன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற 1008 குடம் பாலபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : 1008 Kudam Balabhishekam ,Tiruthani Murugan Temple ,Tiruthani ,1008 ,Gudam Balabhishekam ,Thiruthani Murugan Temple ,Tamil New Year ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை