×

பொக்லைன் இயந்திரத்தின் மீது போலீஸ் வேன் மோதி விபத்து: 10 காவலர்கள் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை 3 பெண் காவலர்கள் உட்பட 15 காவலர்கள் நேற்று காலை திருவள்ளூர் நீதிமன்ற விசாரணையில் உள்ள கைதிகளை புழல் சிறையில் இருந்து அழைத்து வர திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து போலீஸ் பாதுகாப்பு வேனில் புறப்பட்டனர். இந்த போலீஸ் பாதுகாப்பு வேனை காவலர் ராஜா ஓட்டிச் சென்றார். இந்நிலையில், திருவள்ளூர் – செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஈக்காடுகண்டிகை அருகே போலீஸ் பாதுகாப்புடன் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது போலீஸ் பாதுகாப்பு வேன் திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவலர்கள் சின்னதுரை, சீனிவாசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இரண்டு பேரையும் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் 8 காவலர்கள் லேசான காயமடைந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post பொக்லைன் இயந்திரத்தின் மீது போலீஸ் வேன் மோதி விபத்து: 10 காவலர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur District Armed Forces ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...