×

எல்லையில் ஊடுருவிய பாக் நபர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் சம்பா பகுதியில் சக் பகியூரா எல்லை பகுதியில் பாகிஸ்தானில் இருந்து ஒருவர் ஊடுருவ முயன்றார். அவரை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் கடுமையாக எச்சரித்தனர். எனினும் அவர் அதனை பொருட்டுத்தாமல் எல்லை வேலியை கடந்து முன்னேறினார். இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார். சர்வதேச எல்லையில் இந்திய பகுதியில் சுமார் 40 மீட்டர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டது. கடந்த நவம்பரில் இதே பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஊடுருவல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post எல்லையில் ஊடுருவிய பாக் நபர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Pak border ,Jammu ,Pakistan ,Chak Bakiura ,Samba ,Jammu and ,Kashmir ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை