×

தற்காலிக பஸ்நிலையத்தில் தடுமாறும் டவுன் பஸ்கள் கோடை மழையால் சேதமடையும் மாநகர சாலைகள்

நெல்லை : நெல்லையில் தொடர்ந்து பெய்யும் கோடை மழையால் மாநகர பகுதியில் பல்வேறு சாலைகள் மீண்டும் சேதமடைந்துள்ளன. ஈரடுக்கு பாலத்தின் கீழ்ப்பகுதியில் குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்பதோடு தற்காலிக பஸ்நிலையத்தில் டவுன் பஸ்கள் தட்டுத் தடுமாறிச்செல்லும் அவலம் தொடர்கிறது. நெல்ைல மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர்த் திட்டப்பணி மற்றும் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பல்வேறு பிரதான சாலைகளிலும் சிறிய சாலைகளிலும் அவ்வப்போது மெகா குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. பணி முடிந்ததும் சில இடங்களில் மீண்டும் சாலை அமைக்கப்படாமல் மண்ணால் மூடியுள்ளனர்.இதன் காரணமாக ஒவ்ெவாரு முறை மழை பெய்யும் போதும் இப்பகுதிகளில் மேடுபள்ளங்கள் ஏற்படுவதும் வாகனங்கள் தடுமாறிச்செல்வதுமான நிலை தொடர்கிறது. தற்காலிகமாக போடப்படும் சாலைகளிலும் மழை பெய்தால் பிரச்னை தலைதூக்குகிறது. உருக்குலைந்த இச்சாலைகளில் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்துசெல்லும் அவலம் தொடர்கிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக நெல்லையில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் வெப்ப சலன மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மிக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குட்டைபோல் தேங்கியது.ஒருசில பகுதிகளில் மழைநீர் நேற்றும் 2ம் நாளாக வடியாமல் இருந்தது. குறிப்பாக நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் போலீஸ் நிலையம் அருகே கீழ்ப்பாலம் தொடங்கும் சந்திப்பு பகுதியில் அதிக அளவில் குட்டை போல் மழை நீர் தேங்கியுள்ளது. இப்பகுதியை கடக்கமுடியாமல் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பாலம் இறக்கத்தில் வேகமாக வரும் சில இருசக்கர வாகனஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது.இதேபோல் ஏற்கனவே பல்வேறு பணிகளால் உருக்குலைந்த புரம் சிவசக்தி சாலை சந்திப்பு பகுதியில் ராட்சத பள்ளங்கள் உருவாகியுள்ளதால் இப்பகுதியை வாகனங்கள் ஊர்ந்துதான் கடக்கின்றன. இதனால் இங்கு அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனிடையே நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையபகுதி சாலையும் கோடை மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதன் உள்ளே பஸ்கள், ெசன்றுவரும் சாலையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் பஸ்கள் தள்ளாடி செல்கின்றன. இப்பகுதியை கடந்துவரமுடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலப்பாளையம்  ரெட்டியார்பட்டி சாலையில் குட்டைபோல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியை இருச்சக்கர வாகனங்கள் மட்டுமின்றி பெரிய வாகனங்களும் கடந்து செல்வதில் சிரமப்படுகின்றன. இதேபோல் மாநகரில் பல்வேறு சாலைகளில் கோடை மழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த பகுதிகளை உடனே சீரமைப்பதுடன் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நீர் தேங்காமல் வடிய உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்….

The post தற்காலிக பஸ்நிலையத்தில் தடுமாறும் டவுன் பஸ்கள் கோடை மழையால் சேதமடையும் மாநகர சாலைகள் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Eruduku Bridge ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...