×

துல்கர் சல்மான் படத்தில் ராஷ்மிகா

சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் சீதா ராமம் படத்தில் ராஷ்மிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கும் படத்துக்கு சீதா ராமம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகி வருகிறது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். ஹனு ராகவபுடி இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ், சுவப்னா மூவிஸ் இணைந்து படத்தை தயாரிக்கிறது. இதில் ராம் என்ற கேரக்டரில் துல்கர் சல்மானும் சீதா என்ற வேடத்தில் மிருணாள் தாக்கூரும் நடிக்கிறார்கள். ஆப்ரின் என்ற முஸ்லிம் பெண்ணாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார். காதலுடன் கூடிய திரில்லர் கதையாக இந்த படம் உருவாகிறது….

The post துல்கர் சல்மான் படத்தில் ராஷ்மிகா appeared first on Dinakaran.

Tags : Rashmika ,Chennai ,Dulquer Salmaan ,Seetha Ramam ,Bollywood ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...