×

சித்தா, ஆயுர்வேதா, மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு: சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 17ம் தேதி கலந்தாய்வு

சென்னை: தமிழகத்திலுள்ள சுயநிதி இந்திய மருத்துவமுறை  மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா,  மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப்படிப்புகளில்  முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 17ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை தெரிவித்துள்ளது. கலந்தாய்வு அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்று மற்றும் நீட் தேர்வில் கலந்துகொண்டு தகுதிக்கு தேவையான சதமான மதிப்பெண்களை பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து வகுப்பினரும் விண்ணப்பக் கட்டணமாக ₹500  கலந்தாய்வின் போது நேரில் பணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்தை 17ம் தேதி பிற்பகல் 11 மணிவரை www.tnhealth.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 17ம் தேதியன்று காலை 11 மணிக்குள் தேர்வுக்குழு அலுவலகத்தில் நேரடியாக மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும். 11 மணிக்குமேல் பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் கண்டிப்பாக பெறப்படமாட்டாது. பொது தரவரிசைப் பட்டியல் விண்ணப்பதாரர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சரிபார்த்த பின்னர் அன்றைய தினமே பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிடப்பட்டு, பிற்பகல் 2 மணியளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்….

The post சித்தா, ஆயுர்வேதா, மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு: சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 17ம் தேதி கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Siddha ,Chennai ,Ayurveda ,Homeopathic ,Self-Finance Indian Medical Colleges ,Homeopathic Medical Colleges ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆவடி சித்த மருத்துவர் மற்றும் அவரது...