×

விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் சத்குணம், சுரேஷ் ராஜ் உட்பட 3 பேரின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி இலங்கை மீன் பிடி படகு ஒன்று வந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் இலங்கை மீன் பிடி படகை வழிமறித்து சோதனை செய்தனர். அதில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட 300 கிலோ ஹெராயின், 9 எம்எம் துப்பாக்கி வகையை சேர்ந்த 1000 தோட்டாக்கள், 5 ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதைதொடர்ந்து 6 பேரை கைது செய்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது, அவர்கிளிடம் நடத்திய விசாரணையில் விடுதலைப்புலிகள் புலனாய்வு துறையில் முக்கிய பதவியில் இருந்த சபேசன் (எ) சத்குணம், ரமேஷ், சவுந்தர்ராஜன் ஆகியோர் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. பிறகு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு சொந்தமான சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் கேரளாவில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியது. குறிப்பாக விடுதலைப்புலி இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஹெராயின் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. என்ஐஏ வழக்கு பதிவை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக முதலீடு செய்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் இருந்து நிதி திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் உறுதியானது. பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் புலனாய்வுத்துறையில் முக்கிய பதவியில் இருந்த சபேசன் (எ) சத்குணம், சுரேஷ்ராஜ், சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு சொந்தமான தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள 6 ஆசையா சொத்துகள், 12 வாகனங்கள், பல்வேறு வங்கியில் வைப்பு நிதியாக உள்ள பணம் உட்பட ரூ.3.59 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கினர். மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் சத்குணம், சுரேஷ் ராஜ் உட்பட 3 பேரின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sadhkunam ,Suresh Raj ,Chennai ,Indian Sea ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...