×

5 கிலோ மீட்டர் தூரம் செல்வதை தவிர்க்க பல்லாவரத்தில் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘பல்லாவரம் 6 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதி. இங்கு 60க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இங்குள்ள மக்கள், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால், ஒருபுறத்தில் தாம்பரத்துக்கு 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். மற்றொருபுறம் ஆலந்தூருக்கு 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஏற்கனவே, கடந்த சட்டசபை கூட்டத்தில் நான் பேசுகின்ற போது பலமுறை இதை குறிப்பிட்டு பேசி இருக்கிறேன். எனவே, பல்லாவரத்தில் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்,’ என்றார்.இதற்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ‘இந்த கருத்தை சட்டமன்ற உறுப்பினர் பலமுறை என்னிடம்  வலியுறுத்தி இருக்கிறார். கண்டிப்பாக துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து சென்று, பல்லாவரத்தில் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும்,’ என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது….

The post 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதை தவிர்க்க பல்லாவரத்தில் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,E. Karunanidhi ,Chennai ,Block ,MLA ,Karunaniti ,Dizhaga ,E. Karunanidi ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...