×

எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கிய சுற்றுலா!: அதிபர் கோத்தபாயவிற்கு எதிராக இலங்கையில் வெளிநாட்டு பயணிகளும் போராட்டம்..!!

கொழும்பு: இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் நேற்று அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசு வரிச் சலுகை அளித்ததன் மூலம் சுற்றுலா, ஏற்றுமதி மூலம் ஈட்டிய வருவாய் குறைந்தது. இதனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தியாவசியமான பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்வதற்கு கூட அந்நிய செலாவணி இல்லாமல் சிக்கி தவித்தது. இதனால், பெட்ரோல், டீசல், காஸ், உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மறுபுறம், இவற்றை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதில், பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இலங்கை அரசை கண்டித்து ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் சுற்றுலா முடங்கியதாக இலங்கையில் வெளிநாட்டு பயணிகளும் போராட்டம் நடத்தினர். அம்பலாங்கொட என்ற பகுதியில் வெளிநாட்டினர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என வெளிநாட்டினர் அப்போது தெரிவித்தனர். சுற்றுலாவிற்காக வெளிநாடுகளில் இருந்து பெரும் பணத்தை செலவழித்து இலங்கை வந்த தாங்கள் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக 4 சுவருக்குள் முடங்கியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்….

The post எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கிய சுற்றுலா!: அதிபர் கோத்தபாயவிற்கு எதிராக இலங்கையில் வெளிநாட்டு பயணிகளும் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,President Gothapaya ,Colombo ,President Gotabaya ,Dinakaran ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...