×

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோடை மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் உயிரிழப்பு: தாய்க்கு தீவிர சிகிச்சை

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோடை மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையம் அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தனது மனைவி வேலம்மாள், இளையமகன் ரேவதி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று மாலையில் இருந்து கடையம் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், இரவு கல்யாணசுந்தரத்தின் வீடு இடிந்து விழுந்தது. இதில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது இளையமகன் ரேவதி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த வேலம்மாள் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வீடு விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆழ்வார்குறிச்சி போலீசார், கல்யாணசுந்தரம், ரேவதி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். …

The post தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோடை மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் உயிரிழப்பு: தாய்க்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Tenkasi District ,Katayam ,Tenkasi ,Kadayam ,Kadayam… ,Dinakaran ,
× RELATED சென்னை: காவலர் பணி நீக்கம்