×

திண்டுக்கல் அருகே கோர விபத்து: சம்பவ இடத்திலேயே நிறைமாத கர்ப்பிணி பலி; படுகாயங்களுடன் கணவர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. முசிறி தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், சுகந்தி தம்பதியினர் அதே பகுதியில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், சுகந்தியின் தாயார் வீட்டிற்கு இருவரும் காரில் திண்டுக்கல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகே, குட்டியப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணியான சுகந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கணவர் சதீஷ் படுகாயமடைந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சதீஷை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post திண்டுக்கல் அருகே கோர விபத்து: சம்பவ இடத்திலேயே நிறைமாத கர்ப்பிணி பலி; படுகாயங்களுடன் கணவர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Gora accident ,Dindigul ,Vatthalakundu ,Dindigul district ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...