×

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரிப்பு; வஞ்சிரம் ரூ.1700, சங்கரா ரூ.700, இறால் ரூ.600க்கு விற்பனை

சென்னை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை காசிமேட்டில் மீன்வாங்க நேற்று அசைவ பிரியர்கள் குவிந்தனர். வரத்து குறைவால் மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வஞ்சிரம், சங்கரா, இறால், நண்டு விலை ஏகிறியது. தமிழகம் முழுவதும் டீசல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் விலை குறைவு காரணமாக குறைவான மீனவர்களே கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு. ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை தினம் ஆகும். இதனால், அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். இதனால், ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும்பாலானவர்களின் வீடுகளில் அசைவ உணவு வைப்பது வழக்கம். இதனால், நேற்று அனைத்து மட்டன், சிக்கன் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரை அனைத்து வகையான மீன்கள் கிடைக்கும் என்பதால், ஆழ்கடலில் பிடித்து வரப்படும் மீன்கள் அங்கேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாலும் இங்கு எல்லா நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இதனால், நேற்று காலை முதல் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதலே ஆயிரக்கணக்கான மீனவர்கள் அங்கு திரண்டனர். அதே நேரத்தில் குறைந்த அளவில் மீன்கள் வரத்து இருந்தது. இதனால், மீன்விலையும் அதிகரித்து காணப்பட்டது. அதாவது, சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.800லிருந்து ரூ.1100 ஆகவும், பெரிய வஞ்சிரம் ரூ.1300லிருந்து ரூ.1700 ஆகவும், சங்கரா மீன் ரூ.400லிருந்து ரூ.700 ஆகவும், நெத்திலி ரூ.400 லிருந்து ரூ.650க்கும் விற்கப்பட்டது. அதே போல வவ்வால் ரூ.550லிருந்து ரூ.1000 ஆகவும், கடம்பா ரூ.450லிருந்து ரூ.700க்கும்,இறால் ரூ.400லிருந்து ரூ.600க்கும், பாறை ரூ.500லிருந்து ரூ.850க்கும் விற்கப்பட்டது. மேலும் நண்டு ரூ.400லிருந்து ரூ.700, கொடுவா ரூ.450லிருந்து ரூ.650 ஆகவும்  விலை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது. வருகிற 15ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இந்த தடைக்காலம் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடைக்காலத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். இதனால், தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வரும் நாட்களில் மீன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது….

The post ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரிப்பு; வஞ்சிரம் ரூ.1700, சங்கரா ரூ.700, இறால் ரூ.600க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kasimet, Chennai ,Shankara ,CHENNAI ,Kasimet ,Vanjiram ,Dinakaran ,
× RELATED முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்;...