×

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமார் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வந்து இருந்தாலும் தற்போது தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது ஆனால் அதுக்குள் அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தி ஒன்று வந்துள்ளது.

அது என்னவென்றால் இஸ்ரேல் நாட்டில் போர் நடந்து வருகிறது அதன் தாக்கம் துபாய் அசர்பைஜான் போன்ற நாடுகளில் இருப்பதால விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தடைபடலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தை அடுத்து அஜித், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்காக அஜித் ரூ 170 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

The post ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajit ,Adik Ravichandran ,Ajit Kumar ,Makhtirumeni ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற...