×

திம்பம் மலைச்சாலையில் கனரக வாகனங்கள் அனுமதி கோரி பண்ணாரியில் லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம்

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதை வழியாக கனரக சரக்கு வாகனங்களை அனுமதிக்க கோரி பண்ணாரி சோதனை சாவடியில் லாரி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இந்த இடம்  முதல் தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காரப்பள்ளம் வரை உள்ள 27 கிலோ மீட்டர் தூர வனப்பகுதிக்குள் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை மற்றும் வனச்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதாக கூறி தொடர்ந்த  வழக்கில் திம்பம் மலைப்பாதையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. காலை 6 முதல் மாலை 6 மணி வரை 6 சக்கரங்கள் மற்றும் 10 சக்கரங்கள் கொண்ட லாரிகளில் அதிகபட்சமாக 16.2 டன் எடை வரை மட்டுமே உள்ள லாரிகள் திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று பண்ணாரி சோதனை சாவடியில் 16.2 டன் எடைக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் டிரைவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் திடீரென லாரி டிரைவர்கள் லாரிகளை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களிடம் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவால் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக தெரிவித்தனர். 16.2 டன் அளவுக்கு குறைவாக ஏற்றினால், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் எந்த கனரக லாரிகளையும் இயக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என டிரைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   சத்தியமங்கலம் பகுதி முழுவதும் கடையடைப்பு மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாமல் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்து இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். …

The post திம்பம் மலைச்சாலையில் கனரக வாகனங்கள் அனுமதி கோரி பண்ணாரியில் லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pannari ,Thimbam mountain ,Satyamangalam ,Thimbam ,Thimbum mountain mountain ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது