×

லியோ சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை:‘லியோ’ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாட்களுக்கு அதாவது, 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முதல் நாளன்று மட்டும் அதிகாலை 4 மணி காட்சிக்கு படக்குழு அனுமதி கேட்டிருந்தது. இதற்கிடையே பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போது சில நடனகலைஞர்கள் அவர்களுக்கு லியோ படத்துக்காக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இது தவறான தகவல். சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள் என அனைவருக்கும் ஊக்கத்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் வழங்கப்பட்டுவிட்டது’ என்றார்.

இந்த நிலையில், ‘லியோ’ டிரெய்லரில் இடம்பெற்ற அந்த வார்த்தையை தற்போது படக்குழு மியூட் செய்துள்ளது. ஏற்கெனவே படத்தைப் பார்த்த தணிக்கை குழு இதில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. மேலும் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ‘படத்தில் இப்படி விஜய் வசனம் பேசலாமா என்கிறார்கள். அது விஜய் பேசும் வசனம் கிடையாது. அவர் ஏற்றுள்ள பார்த்திபன் என்ற கேரக்டர் பேசும் வசனம். அப்படித்தான் அதை பார்க்க வேண்டும்’ என்றார். இந்த படத்தின் 3வது பாடலான ‘அன்பெனும்’ என்று தொடங்கும் பாடல், நேற்று மாலை இணையதளத்தில் வெளியானது.

The post லியோ சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamil Nadu government ,Leo ,Chennai ,Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...