×

குப்பநத்தம் அணையில் தண்ணீர் திறப்பு தூர்ந்து போன கால்வாய்களால் ஏரிகள் நிரம்புவதில் சிக்கல்-விவசாயிகள் வேதனை

செங்கம் : குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போயுள்ளதால் ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் நீடிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட்டார். தொடர்ந்து, 47 ஏரிகளுக்கு செல்லும் வகையில் 26 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.இந்நிலையில், பெரும்பாலான ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களில் செடி, கொடிகள் மண்டி காணப்படுகிறது. கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளதால் தண்ணீர் செல்வதற்கு வழியில்லை. இதனால், அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், ஏரிகளுக்கு செல்லாமல் ஆற்றிலேயே வீணாக செல்கிறது. கடந்த காலங்களில் ஏரி நீர்வரத்து கால்வாய்களை முறையாக தூர்வாரி சீரமைக்காததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் உரிய முறையில் ஏரிகளுக்கு சென்றுசேர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குப்பநத்தம் அணையில் தண்ணீர் திறப்பு தூர்ந்து போன கால்வாய்களால் ஏரிகள் நிரம்புவதில் சிக்கல்-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kuppanantham ,Sengam ,Kuppanantham dam ,
× RELATED ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு எனக்கூறி...