×

தேவதானப்பட்டியில் சூறாவளிக்கு 2 ஆயிரம் வாழை நாசம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 2 ஆயிரம் வாழை மரங்கள் ஒடிந்து நாசமாகின. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, தர்மலிங்கபுரம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமாகின. இது தவிர அகத்தி மரங்கள், தென்னை மரங்கள் ஆங்காங்கே ஒடிந்து கிடக்கின்றன. மீண்டும் மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால், சாகுபடி பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தது.இது குறித்து சில்வார்பட்டி வாழை விவசாயி அழகர்ராஜா (32) கூறுகையில், ‘ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல், ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. தற்போது வாழை பூப்பூத்து தார் போட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு என்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமாகின. வாழை தார்கள் பிஞ்சுகளாக உள்ளதால், இதை மார்க்கெட்டிலும் விற்பனை செய்ய முடியாது. இதனால் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்….

The post தேவதானப்பட்டியில் சூறாவளிக்கு 2 ஆயிரம் வாழை நாசம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Devadhanapatti ,Foddhanapatti ,Devadanapatti ,Dinakaran ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை