×

நீட், புதிய கல்வி கொள்கையை ஒழித்து கட்ட வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

நாகை: நாகை அவுரித்திடலில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்த பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், திக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில உரிமை மீட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாள் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறேன். கல்வி உரிமை அனைவருக்கும் பிறப்புரிமை. தகுதி தேர்வு, நுழைவு தேர்வுகள் என்ற பெயரில் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை பறித்துவிட வேண்டும் என்பதை ஒன்றிய அரசு நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நீட், புதிய கல்வி கொள்கையை ஒழித்து கட்ட வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்றார்….

The post நீட், புதிய கல்வி கொள்கையை ஒழித்து கட்ட வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : NEET ,K. Veeramani ,Nagai ,Dravidar Kazhagam ,Nagai Aurithidal ,Dinakaran ,
× RELATED நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார்...