×

காக்களூர் ஊராட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சிக்குட்பட்ட பாக்கியம் நியூ டவுன் பகுதியில் உள்ள அம்மா பூங்காவில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ், துணை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பாக்கியம் நியூ டவுன் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். …

The post காக்களூர் ஊராட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kakaloor panchayat ,Tiruvallur ,Amma Park ,Pakhyam New Town ,Kakkalur Panchayat ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை