×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் பாதசாரிகளுக்கே அதிக பாதிப்பு: வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். அப்போது இந்தியாவில், சாலை விபத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் இறக்கின்றனர். விபத்தில் இறப்பவர்களில் பெரும்பாலானோர் தலையில் அடிபட்டு மரணமடைகின்றனர். இதுபோன்ற விபத்துகள் 4 வகையாக அதிகளவில் நடக்கின்றன.முதல் காரணம் ஹெல்மெட்: அதிகப்படியான இருசக்கர வாகனங்களாலேயே ஏற்படுகிறது. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆனாலும், 80% பேர் மட்டுமே ஹெல்மெட் அணிகின்றனர். மீதமுள்ள 20%பேர் ஹெல்மெட் அணிவதில்லை. குறிப்பாக, ஓட்டுநருடன் பயணிப்பவர் ஹெல்மெட் அணிவதே இல்லை. 2வது காரணம் அதிக பாரம்: படித்தவர், பாமரர் என பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருமே, ஒரு இருசக்கர வாகனத்தில் 3 அல்லது 4 பேர் பயணிக்கின்றனர். சில நேரங்களில், ஒரு இருசக்கர வாகனத்தில் சிறுவர்களுடள் 5 முதல் 6 பேர் பயணிக்கின்றனர். இதுவும் முக்கிய காரணம்.3வது செல்போன்: செல்போனில் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தை இயக்குவதால் ஓட்டுநரின் கவனம் சிதறுகிறது. ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு, இன்னோரு கையால் வண்டியை ஓட்டுவதால், திடீரென பிரேக் பிடிக்கும் சூழல் வரும்போது, வாகன ஓட்டி நிலைதடுமாறி விபத்து ஏற்படுகிறது. 4வது மது அருந்துதல்: மது அருந்திவிட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதால், ஓட்டுநர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஓட்டுநர்களைவிட, சாலையில் பயணிப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள், மேற்கூறிய நெறிமுறைகளை கடைப்பிடித்து, சாலை விபத்துகளை தடுத்து, தங்களது இன்னுயிரை காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறினார்….

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் பாதசாரிகளுக்கே அதிக பாதிப்பு: வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Road Safety Awareness Camp ,Sripurudur ,Road Safety ,Awareness Camp ,Sripurudur Local Transport Office ,Sripurudur Bus Station ,
× RELATED நேரடியாக இனி வழங்கப்படாது விரைவு...