×

இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை:  பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி, இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்துவரும் இணை ஆணையர்களை பணியிட மாறுதல் மற்றும் நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி, சென்னை அலுவலக திருப்பணி இணை ஆணையர் சுதர்சனுக்கு பதிலாக, காஞ்சிபுரம் இணை ஆணையர் ஜெயராமன் நியமிக்கப்படுக்கிறார். காலியாக உள்ள சென்னை அலுவலக தலைமையிட இணை ஆணையர் பதவிக்கு சுதர்சன் இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் இணை ஆணையர் ஜெயராமனுக்கு பதிலாக, சென்னை அலுவலக சரிபார்ப்பு  இணை ஆணையராக வான்மதி நியமிக்கப்படுகிறார். காலியாக உள்ள வேலூர் இணை ஆணையர் பதவிக்கு, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் லட்சுமணன் நியமிக்கப்படுகிறார். அதேபோல் காலியாக உள்ள விழுப்புரம் இணை ஆணையர் பதவிக்கு, சென்னை அலுவலக சட்ட இணை ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்படுகிறார். மேலும், முழுக்கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்படும் வேலூர் இணை ஆணையர் லட்சுமணன் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராகவும் செயல்படுவார். சென்னை அலுவலக திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், சென்னை அலுவலக சரிபார்ப்பு இணை ஆணையராகவும் செயல்படுவார். அதேபோல், சென்னை அலுவலக தலைமையிட இணை ஆணையர் சுதர்சன், சென்னை அலுவலக சட்ட இணை ஆணையராகவும் செயல்படுவார். …

The post இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Hindu Relevant Foundation ,Chennai ,Hindu Religious Institute ,Chandramogan ,Hindu ,Hindu Religious Foundation ,
× RELATED 3 ஆண்டுகளில் ரூ.5,812.64 கோடி மதிப்புள்ள...