×

பொதுமக்களின் அடிப்படை வசதி குறித்து மலைக்கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

போடி: போடி அருகே, ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொட்டகுடி, முதுவாக்குடி, குரங்கணி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதி குறித்து தேனி கலெக்டர் முரளீதரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது குரங்கணி-முதுகுடி சாலையில் 6.5 கி.மீ தூரச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், இதை சீரமைக்க 300 மீட்டர் வரை கல்பாவிய பணியையும், பாதையையும் தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், 15 பசுமை வீடு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, சரியாக கட்டப்படுகிறதா என அதிகாரிகளை கேட்டறிந்தார்.மேலும், பழங்குடியின மக்களின் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். துறை வாரியான அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கொட்டகுடி பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர் மருதப்பன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாதுரை, போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகரன், அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரன், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post பொதுமக்களின் அடிப்படை வசதி குறித்து மலைக்கிராமங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Kotakudi ,Muduvakudi ,Kurangani ,Panchayat Union ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...