×

காதணி விழாவுக்காக ஆதார் அட்டை போல் அழைப்பிதழ் அச்சடிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவரது குழந்தைகள் கவிணி, ரன்ஹீதா ஆகியோருக்கு காதணி விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. இதற்காக இவர் அச்சடித்த அழைப்பிதழ் உறவினர்கள், நண்பர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆதார் கார்டு போன்றே அழைப்பிதழை அச்சடித்துள்ளார். அழைப்பிதழை வாங்குபவர்கள், விளையாட்டாக விஜயபாஸ்கரின் ஆதார் அட்டையை தருகிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழில் காதணி செல்வங்கள், முகவரி, விழா நடக்கும் மண்டபம், தாய்மாமன், உறவினர்கள், கிராம கமிட்டி பெயர்கள் ஆதாரில் உள்ள எழுத்து போலவே பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழுக்காக சில வித மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆதார் – சாதாரண மனிதனின் அதிகாரம் எனபதை மாற்றி சாதாரண மனிதனின் அழைப்பு எனவும், சிங்க முத்திரை இருக்கும் இடத்தில் கொக்கரக்கோ கேட்டரிங் எனவும் உள்ளது. உங்கள் ஆதார் எண் என்ற இடத்தில் எங்கள் மொபைல் எண் என அச்சடிக்கப்பட்டுள்ளது. தகவல் என்கிற இடத்தில் உறவினர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. அதேபோல் அழைப்பிதழ் கவரும் தபால் மூலம் வீடு தேடி வரும் ஆதார் அட்டை கவர் போன்றே அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை போன்றே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது….

The post காதணி விழாவுக்காக ஆதார் அட்டை போல் அழைப்பிதழ் அச்சடிப்பு appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Kathani ,Tiruvarur ,Vijayabaskar ,Udayamarthandapuram ,Muthuppet ,Tiruvarur district ,Panchayat Council ,Deputy Chairman ,Kavini ,Ranheeta ,
× RELATED லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம்...