×

மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் ஐஐடி தலைமை மருத்துவர் ரபேக்காவிடம் போலீஸ் விசாரணை: மாணவிக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என சரமாரி கேள்வி

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை, தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவன் கிங்ஷீக்தேவ் சர்மாவால், 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். மேலும், தன் நண்பர்களான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து மாணவியை தொடர் கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த 2021 மார்ச் 29ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திலும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். எனினும் இந்த வழக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகாரின் படி ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களான கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவீந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சவுர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது ஐபிசி 354, 354(பி), 354(சி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 9 மாதங்களுக்கு பிறகு 5 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஐஐடியில் உள்ள மருத்துவமனையில் ஏதேனும் சிகிச்சை பெற்றாரா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐஐடி தலைமை மருத்துவர் ரபேக்காவுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து நேற்று முன்தினம் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரணியன்  மற்றும் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் முன்பு ஆஜரானார், அவரிடம் ஐஐடி தலைமை மருத்துவர் ரபேக்கா விளக்கம் அளித்தார். அப்போது, அவரிடம், மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளான காலத்தில், ஐஐடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா. எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மாணவியுடன் யார் இருந்தனர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் ஐஐடி தலைமை மருத்துவர் ரபேக்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும், மாணவி ஐஐடியில் படித்த காலம் முதல் படித்து முடித்து வெளியேறிய காலம் வரை அவருக்கு ஐஐடி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அனைத்து மருத்துவ சிசிக்சை குறித்த அறிக்கையும் ஐஐடி தலைமை மருத்துவர் ரபேக்கா போலீசாரிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் படி போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும், இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள முக்கிய குற்றவாளி உட்பட 8 பேர் மீதான ஜாமீனை ரத்து செய்யவும் வழக்கிற்கு தேவையான முக்கிய தகவல்களை சேகரிக்கவும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்….

The post மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் ஐஐடி தலைமை மருத்துவர் ரபேக்காவிடம் போலீஸ் விசாரணை: மாணவிக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : IIT ,Rabeka ,Saramari ,Chennai ,West Bengal ,Chennai IID ,Doctor ,
× RELATED வங்காள விரிகுடா, பெருங்கடல்கள்...