×

மழைநீர் வடிகால் குழாய் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி – மஞ்சூர் சாலையில் காந்தி நகர் முதல் லவ்டேல் வரை 3க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து லவ்டேல் வழியாக மஞ்சூர் பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் இச்சாலை வழியாக கெத்தை, இரியசீகை, தூதூர்மட்டம், தங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் காந்திநகர் முதல் லவ்டேல் வரை உள்ள சாலையில் மழைகாலங்களில் மழைநீர் வழிந்தோட வசதியின்றி சாலையில் வழிந்தோடக் கூடிய நிலை காணப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைக்கு நடுவே மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஜேசிபி., உதவியுடன் சாலையின் நடுவே பள்ளம் ேதாண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன் சாலை அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது….

The post மழைநீர் வடிகால் குழாய் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Manjoor ,Gandhi Nagar ,Lovedale ,Dinakaran ,
× RELATED வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு