×

பாலாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 ஏக்கர் நிலம் மீட்பு

வாணியம்பாடி: பாலாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். வாணியம்பாடி தாலுகா அம்பலூர்  உள் வட்டத்திற்கு  உட்பட்ட பகுதிகளான புல்லூர், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அகற்றும் பணியில் துணை தாசில்தார் சிவக்குமார் தலைமையில்,  வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்திபன், சீனிவாசன், காசிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆற்றங்கரை பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை  மீட்டனர்….

The post பாலாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 ஏக்கர் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : VANIYAMBADI ,Balatam ,Vaniyambadi Thaluka Ambalur ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை