×

அரசு சுவர்களில் அகற்றப்பட்ட போஸ்டர்கள்

சிவகாசி: தினகரன் செய்தி எதிரொலியாக அரசு சுவர்களில் அலங்கோலமாக காணப்பட்ட வால்போஸ்டர்கள் அகற்றப்பட்டது. சிவகாசியில் தாலுகா அலுவலகம், ஆனையூர் விஏஓ அலுவலகம் உட்பட அரசு சுவர்களில் வால்போஸ்டர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என் நேற்று தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து ஆனையூர் ஊராட்சி சார்பாக நேற்று காலை ஆனையூர் விஏஓ அலுவலக சுற்றுச்சுவர் தண்ணீர் பிய்ச்சி அடித்து சுத்தம் செய்யப்பட்டது. இதனால், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போன்று தாலுகா அலுவலகம், டவுன் விஏஓ அலுவலகம் உட்பட அரசு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்டர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post அரசு சுவர்களில் அகற்றப்பட்ட போஸ்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Dhinakaran ,Anayur ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை