×

சித்திரை விஷு பண்டிகை பூஜை: சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில்  நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 11ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி உண்டு. வரும் 15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.  காலை 4 முதல் 7 மணி வரை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை கைநீட்டமாக வழங்குவார்கள். இதற்கிடையே சபரிமலையில் உயர்த்தப்பட்டுள்ள பூஜை மற்றும் பிரசாத கட்டண உயர்வு 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது….

The post சித்திரை விஷு பண்டிகை பூஜை: சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sitrishi ,Vishu Festive Puja ,Sabarimalai Temple ,Thiruvananthapuram ,Vishu festival of Sitru ,Kerala ,Sabarimalai Iyappan Temple ,Chitru Vishu Festive Pooja ,
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு