×

பொங்கலுக்கு வெளியாகும் வெங்கடேஷின் சைந்தவ்

ஐதராபாத்: வெங்கடேஷின் 75வது படமாக உருவாகி வரும் ‘சைந்தவ்’ படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஹிட்வெர்ஸ் படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு படத்தை இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கட் பொயனபள்ளி படத்தை தயாரித்துள்ளார். வெங்கடேஷுக்கு பொங்கல் வெளியீடு எப்போதும் நல்ல வகையில் அமைந்து இருக்கிறது. அந்த வகையில் இப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. ‘சைந்தவ்’ சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, இப்படத்தில் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பாலிவுட்டை சேர்ந்த பன்முகத் தன்மை கொண்ட நடிகரான நவாசுதீன் சித்திக், சைந்தவ் படத்தில் விகாஸ் மாலிக் கதாபாத்திரம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். படத்தின் நாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். இவர் மனோயா என்ற கதாபாத்திரத்தில் நடத்துள்ளார். இவர்களுடன் ருஹானி ஷர்மா டாக்டர் ரேனுவாகவும், ஆன்ட்ரியா ஜெர்மியா ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை எஸ்.மணிகண்டன் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை கேரி பி.ஹெச். செய்துள்ளார்.

The post பொங்கலுக்கு வெளியாகும் வெங்கடேஷின் சைந்தவ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Venkatesh ,Pongal ,Hyderabad ,Sailesh Kolanu ,Hitverse ,Venkat Poyanapalli ,Niharika Entertainment ,Saindhav ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மத ரீதியான பதிவு; போலீசார் வழக்கு