×

மீண்டும் இணையும் கமல்ஹாசன்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன், அடுத்தபடியாக வினோத் இயக்கும் தனது 233வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போகிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பது யார் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு என்ற படத்திற்கு இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ் அந்த வகையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல் படத்துக்கு அவர் இசையமைக்க போகிறார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

The post மீண்டும் இணையும் கமல்ஹாசன்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamalhasan ,Harris ,Jayraj ,Kamal Hasan ,Shankar ,Vinod ,Trisha ,Kamal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்கள் கடமை: கமல்ஹாசன் பேச்சு