×

ஏப்ரல் 10ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 83% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து தனியார் தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர். ஏற்கனவே செலுத்தப்படும் தடுப்பூசிகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பரவும் அறிகுறிகளின் கால அளவைக் குறைப்பதில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி உதவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 8 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது….

The post ஏப்ரல் 10ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt. Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...