×

அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற சிவலிங்கம் பறிமுதல்: 2,000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்:

சென்னை: சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற பழங்கால சிவலிங்கம் பறிமுதல் சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பவிருந்த பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வின் போது சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்ப ஒரு பார்சல் வந்திருப்பது கண்டுபுடிப்பு பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது நாகாபரணத்துடன் கூடிய பித்தளையால் ஆன சிவலிங்கம் இருந்தது தெரியவந்தது கும்பகோணத்தில் உள்ள கலை கைவினை பொருள் விற்பனை மையத்தில் வாங்கப்பட்டதாக பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது விசாரணையில் சிவலிங்கம் பழமையானது அல்ல என்பதற்கான  தொல்லியல்துறை சான்றை இணைக்கவில்லை. இந்திய தொல்லியல் துறையினருக்கு தகவல் தரப்பட்டு சிவலிங்கம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது  ஆய்வில் சிவலிங்கம் 1,800 முதல் 2,000 ஆண்டுகள் வரை பழமையான சிவலிங்கம்  என தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. 36 செ.மீ.உயரமும் 4.56 கிலோ எடையுள்ள பித்தளையால் ஆன இந்த சிலை விலை மதிப்பற்றது என தொல்லியல் துறை உறுதி செய்தது சிவலிங்கத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் தடை விதித்து பாதுகாப்பில் எடுத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கெடிலம் என்ற இடத்தில் இருந்து சிவலிங்கம் கடத்தி வரப்பட்டது அம்பலம் பழங்கால சிவலிங்க திருமேனியை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சிலை கடத்தல் கும்பலுக்கு சுங்கத்துறை வலைவீச்சு…

The post அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற சிவலிங்கம் பறிமுதல்: 2,000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்: appeared first on Dinakaran.

Tags : Siva Lingam ,America ,Lingam ,Chennai ,Chennai airport ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...